ஆசீர்வாதம்

"என்னய்யா கபாலி.... என்ன இது வேஷம்...? வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டை...?"



"இன்ஸ்பெக்டர் சார்...நான் இப்போ திருந்திட்டேன் சார்...! சின்ன சின்ன திருட்டுகளா பண்ணி வாழ்க்கையில நிம்மதியே இல்லாமப் போச்சு சார்! கட்டுன பொண்டாட்டி கூட மதிக்க மாட்டேங்குறா சார்! அதான்....அவ ஆசைப்பட்டது மாதிரியே, அரசியல்ல குதிச்சு வாழ்க்கையில செட்டில் ஆகிடலாமுன்னு இருக்கேன் சார்!அதான் உங்கள்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன் சார்!"



"எப்படியோ..... நாடு முன்னேறலன்னாலும்...நீ சீக்கிரமே முன்னேறிடுவே"

எழுதியவர் : உமர் ஷெரிப் (7-Apr-14, 8:40 pm)
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே