மூவரும் ஒரே முகம்
முகத்தின் மேலே
கைகள் முள்ளைப் போலே
கைகள் பகல் கனவு!
====================
ஓடிப்போகும் ஒரு கை
மெல்ல நகரும் மற்றொரு
கை தன்னம்பிக்கை!
====================
முட்டையிடும் குஞ்சு
பொரிக்காதுகூட்டில்
குடியிருக்கும் கூடு தாயின் மடி!
====================
கட்டத் தெரியாது
குரலில் இனிமையுண்டு
பாடத்தெரியாது சங்கீதம்!
====================
பார்வைக்குப் பச்சை நிறம்
பாக்கு வெற்றிலை போடாமல்
பச்சை பவளம் கிளி!
===================
கண்ணுக்கு விருந்தாய்
கையில் இருக்கும் கருத்துக்கு
விருந்தாய் மனதில் காவியம்!
===================
ஞானத்தைச் சுமந்து
நமக்குத் தந்தே நல்லபடி வாழ
உதவி செய்யும் நினைவுகள்!
===================
லெத்தீப்

