புகையும் அடுப்புகள்
உலராத விறகின்மேல்
பிடிமானமற்ற தீயை மூட்டிவிட
ஊதி விடுகிறாள் ஏழைத்தாய்
வலிமையிழந்த காற்றின்
சொல்கேளா தீ
பற்றிக்கொள்ள மறுத்து விலகிவிட
புகைகிறது அடுப்பு
கொதியா உலையிலிருந்து
சாதம் நீத்தபடி ஊற
குழந்தைகளின் பசி
அவள் கண்களில் வடிகின்றன!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

