வென்மெய்

நண்பா யின்று காலை ஒரு தேவதை கண்டேன்........

மெல்லிய அழகுடன் ஒரு பெண்
என் நெஞ்சில் மோதிடக் கண்டேன்
சற்று நின்று வழி விட்டுச் சென்றேன்
கண மணி நேரம் அவளை கண்டேன்
கனமானது இருதய மென்றேன் ..
அடடா தேன் போல் இனிக்குதடா
அவள் நினைவு என்னுள்

பால் போல் வென்மெய் அவளோ - ரோஜா
பூப்போல் மேன்மை இதழு
கருமை சூடிய மீன் விழிகளோ
கார்மேகக் கூந்தலில் மல்லிகை பூவோ

என்னை கடந்து
நறுமணம் விசிச் சென்றவளோ

நின்று போனதட என் இருதயம்
சட்டேன்று

என் காதல் பாவை
கண்ணுக்குள் நிற்கிறாள் காதல் பூவாய்

பெரும் முட்சுடன் சிறு புன்னகை பூத்து அவளை நினைத்தபடி என் நாற்காலியில் அமர்ந்தேன்.......

எழுதியவர் : VK (8-Apr-14, 10:59 pm)
பார்வை : 74

மேலே