நீ ஒரு கவிதை
தாவணியில்
வந்தால்
நீ
மரபுக்கவிதை !
சேலையில்
வந்தால்
நீ
புதுக்கவிதை !
சுடிதாரில்
வந்தால்
நீ
நவீனம் !
ஜீன்ஸில்
வந்தால்
நீ
ஹைக்கூ !
ஆக,
நீ
எதில் வருகிறாய்
என்பது
முக்கியமல்ல !
நீ
வருகிறாய்
என்பதே
முக்கியம் !
எப்படி வந்தாலும்
நீ
கவிதைதான் !