ஒரு பெண்ணின் நிலை

பெண் பார்க்க
வந்தவர்களில்...
ஒருவர்
அழகில்லையென்று
சென்றார்..
ஒருவர்
தடவழி
சரியில்லையென்று
சென்றார்...
ஒருவர்
ஜாதகம்
பொருந்தவில்லையென்று
சென்றார்....
ஒருவர்
வரதட்சணை
குறைவென்று
சென்றார்...
அப்படியென்றால்
'பெண் பார்க்க"
வருகின்றவர்கள்
யாருமில்லையா???

எழுதியவர் : ஆ. குமரேசன் (9-Apr-14, 4:01 pm)
Tanglish : oru pennin nilai
பார்வை : 235

மேலே