யானை ஏறும் ஜெய்குட்டி

@
அவ்வளவு அவசரமாய்
அழைத்திருக்கிறான் என்னை
மணிச்சத்தத்தால் தான்
உணர்ந்து வைத்திருக்கும்
யானையைப் பார்ப்பதற்காக!

முன்னமே தெரிந்திருந்தால்
விழித்திருந்திருப்பேன்!

உம்மென்றிருந்த ஜெய்குட்டி
அரைமணிநேரம் கழித்த
இப்போது
யானை ஏறி மகிழ்கிறான்
என் முட்டி வலிக்க!

எழுதியவர் : வைகறை (9-Apr-14, 11:09 pm)
பார்வை : 156

மேலே