மரம்
எனக்காக காய்ந்தாய் , எனக்காக நனைந்தாய்
பட்டுப்போனாலும் கட்டை தந்தாய், வெட்டினாலும் திட்ட மறுத்தாய்
எங்கு பார்த்தாலும் அழகாய் எப்போதும்போல சிரித்தாய்
ஆயிரம்முறை அலட்சியபடுதினேன் உன்னை- ஆனாலும்
அன்னைபோல தாலாட்டினாய் என்னை
உடல் உருப்பை தானம் செய்வதையே உயர்வென்றொம்
முழு உடலையும் தானம் செய்யும் உன்னை என்னவென்போம்
யார் ஊற்றி யார் வளர்த்தாலும் ஊருக்கே உதவும் உன் பண்பு
இதை மறந்து விட்ட நாங்கள் தான் மரக்கட்டைகள் ஆனோம் இன்று.
உயிர் பிரிந்த உடலுடன் உறவுகள் யாரும் எரிவதில்லை
நீ மட்டும் சேர்ந்து எரிகிறாயே கட்டையாக,
இன்னொரு பிறவி நான் கொண்டால்
நிச்சயம் தோன்ற வேண்டும்
உன் பக்கத்தில் ஒரு மரமாக.