என் நிழலே
தொலை தூரப் பயணம்
தொடர்ந்த வழித் துணை
அனிச்சைச் செயலாய் சிலநேரம்
அச்சுறுத்தி நின்றாய் சிலநேரம்
கதிரவன் ஏற்றத்துக்கும்
சந்திரன் சுழற்சிக்கும்
குறுக்கி நெடுக்குகிறாய்
அசுர வளர்ச்சியும்
அதனூடே அடக்கமும்
அடிக்கடி கற்றுத்தந்தாய்
பல்லுரு மாற்றினும்
சொல்மாறா துணை நீ
வாழ்வின் விளிம்புவரை
வலம்வரும் ஒரே துணை
நீயன்றோ என் நிழலே!