கட்டியம் சொல்லும் கொலுசு

பூம் கழல் மேல் கிடக்க
என்ன தவம் நான் செய்தேன்

பொன்னு நவ ரத்தினமாய்
நான் இருந்து என்ன பயன்

பொன் கழல் பற்றி யன்றோ
என் எழில் ஏற்றுகிறேன்

எட்டி வைக்கும் அடிகளுக்கு
முத்துக் கொட்டி சந்தம் சொல்வேன்

செம்பாத அசைவுகளில்
சங்காமல் இசைந்திருப்பேன்

நீ செல்லும் பாதை யெங்கும்
கட்டியம் நான் கூறிடுவேன்
சல் சல் சல்.........

எழுதியவர் : RajaRajeshwari (11-Apr-14, 1:48 pm)
பார்வை : 286

மேலே