கொள் அல்லது கொல்
எனக்கென்ன ஆச்சு ?
எழவில்லை என் வாய் பேச்சு ! -உன்
பின்பார்த்து நின்றது என் மூச்சு.
உன் முன்பார்த்து என்
இருதயம் பனிக்கட்டி ஆச்சு
உன்னிடை பார்த்து தமிழ்
இடையினம் மறந்து போச்சு -உன்
கருங்கூந்தல் நடனத்தில் என்
கருவிழியும் வாங்குது மூச்சு..!
இருவிழி பார்வையில்
எழுதுகிறாய் அதுவென்ன
மின்னல் கவியோ? -காதல்
ஒருவழி பாதையில்
தவிக்கிறேன். செல்லமே !
எந்தன் காதல்
உந்தன் காதில்
இன்னும் கேட்கவில்லையோ?
ரம்பை ஊர்வசி என்று
அம்புவிட்டு வம்பிடும்
மன்மதன் நானில்லை
ராதை கோதை என்று
சீண்டிவிட்டு சிரித்துவிடும்
கண்ணன் நானில்லை.
உனக்காக
உன் உறவுக்காக
உன் காதலுக்காக
உயிர் பிரியும் வலியோடு
உயிர் காதல் கவியோடு
உயிரோடு உணர்வோடு
நடமாடும் ஒழுக்கசீலன்.
நான் உன் கற்புக்கரசன்.
எனை ஏற்றுக்கொள்..!
இல்லையேல் - என்னுயிரை
நீயே வெறுத்து கொல்..!
--இரா.சந்தோஷ் குமார்