நகைச்சுவை 099
நகைச்சுவை ..
கும்பகர்ணன் தையல் கடைக்குப் போயி ஒரு
டீ- ஷர்ட் தைத்துத் தர முடியுமான்னு கேட்டான்.
கடைக்காரன், "யாருக்கு .. உங்களுக்கா" என்று கேட்டான்.
அதற்கு கும்பகர்ணன், "இல்லை .. என் அண்ணன் பிறந்த நாளுக்கு நான் ஒரு டீ- ஷர்ட் கொடுக்க விரும்புகிறேன்" என்று பதில் அளித்தான்.
"இலங்கை வேந்தனின் சகோதரரே ! என்னைக் கொன்று விடுங்கள். நான் கற்ற கல்வி வீண்போயிற்றே" என்று கதறினான்.
அதற்கு, கும்பகர்ணன், "எனக்கு டீ- ஷர்ட் தைத்துத் தர முடியுமானால் என் அண்ணனுக்கு தைத்துத் தர முடியாதா" என்று வினவ,
"முடியாது என்று எப்படி நான் சொல்வது .. ஒரு உடலும் பத்து தலையும் இருந்தால், எப்படி நான் தைத்துக் கொடுப்பேன் என்று தெரியாமல் முழிக்கிறேன்" என்றதும், கும்பகர்ணன் சிரித்துக் கொண்டே.
"சரி அழாதே .. நான் தான் விவரம் தெரியாமல் உன் மனதை நோகடித்து விட்டேன். இன்றுமுதல் நான் சட்டையே அணிவதில்லை" என்று சபதம் செய்தான்.
அடுத்த நாள், இராவணன் கும்பகர்ணன் சட்டை அணிந்திருக்காமல் இருப்பதைக் கண்டு,
"தம்பி நீ ஏன் சட்டை போட்டுக்கவில்லை" என்று கேட்க, வேறு வழியின்றி நடந்த சம்பவத்தை சொல்லவும், ராவணனும் மண்டோதரியும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விழுந்து சிரிக்க, கும்பகர்ணனும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.