இதயம் எரித்தாலும் - அனல் வழி அன்பு தருவேன் --- இராஜ்குமார் --
சாலையோர சாக்கடையை
வன்சொல்லின் வழிவைத்து
அசிங்கம் பல
தூவி தூவி மகிழ்கிறாய்
அன்பெனும்
அழகு மலர் மீது ..!!
வசைபாடும் வார்த்தையை
வாரி வழங்கும்
உன் கோபம் ..!!
தேன் சொட்டும்
அன்பில் - ஓர்
வார்த்தை கூட தொடவில்லை ..!
வழக்கம் போல்
வன்முறை ஏன் ..?
இழிச்செயல் பல
இன்னும் உன்னில் ..!!
அரிவாள் ஏந்தும் அறிஞனே
எத்துனை துளி சிதற செய்தாய் ..!
உன் உடலில் ஓடும் துளிகளில்
ஒன்றில் கூட உணரவில்லையோ ..??
கல்லிடம்
கருணை கேட்கும் மனிதா ..!
உந்தன்
கருணை எரித்து
காணிக்கை வைத்தாயோ ..?
அன்பை
அடிவாரத்தில் தொலைத்து
படிகள் ஏறி - இறைவனையும்
பழி வாங்குகிறாய் ..!!
கண்மூடி
கருணை கேட்டு ..!
கண்மூடிதனம் உன்னிலா ..?
உன் கண்ணிலா ...?
கேவலம் மதுவை மதித்து
தினந்தினம் ரசித்து குடிக்கிறாய்
உன் மகனும் மகளும்
மண் சிலையா - நீ
ரசிக்காமல் இருக்க ..??
தவறை தாங்கும்
உயர் உள்ளம் - மனைவி
அவள்
கன்னம் என்ன
கற்பாறையா
அடிக்கடி அறைகிறாய் ..!!
வீட்டை எரித்து
வீதியில் நிற்க
நீயே முடிவு செய்து
கோபத்தை
கொஞ்சி கொஞ்சி
அன்பை அடித்து துரத்தி
அடைக்கலம் தேடி திரிகிறாய்
அதே தெருவில் ..!!
இதயம் ரசிக்கும்
இதமான அன்பை - உன்
இதழின் கோபம்
கொலை செய்தாலும் ..!!
என் மனம்
மீண்டும் மண்டியிட்டு
மானம் கெட்டு
அன்பை கொடுத்து
அதையே ரசித்து நிற்கும் ..!!
இந்த இதயம்
இரவல் கேட்குமெனி்ல்
அது அன்பிற்கே ..!!
என் இதயம் எரித்தாலும்
விலகி செல்லாமல்
அருகில் நின்று பார் ..!
அனல் வழி தருவேன் - என்
அன்பை
உன் குளிர் போக்க ...!!
-- அன்புடன் இராஜ்குமார்
===============================================
அன்பை வழங்கும் வழியில் சில அனுபவ வரிகள்
===============================================
தோழமைகள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்