தடையை தடுக்க - தைரியம் கொடு தங்கையே -- இராஜ்குமார் --

அன்பை
அள்ளி தந்து
அரவணைத்தேன்

அன்னையிடம் - இல்லை
தந்தையிடம் - இல்லை

தோழனிடம் - இல்லை
தோழியிடம் - இல்லை

தம்பியிடம் - இல்லை
அண்ணனிடம் - இல்லை

காதலி
அவளிடமும் இல்லை

எல்லாம் தந்தேன்
என் தங்கை உனக்காக

ஆனால்
இன்று தடுமாறி
இதயம் உடைந்து - உன்
உள்ளம் தேடி
உருகி நிற்கிறேன்

புரியா மௌனம்
இமைகள் எரிந்தும்
பார்க்க துடிக்கிறேன்

நடந்தும் நகராமல்
நிற்கிறேன் ..!


வீசும் காற்றில்
விரக்தி மட்டும் வருகிறது

ஏதோ ஒரு தடையை
தடுக்க மட்டும்
தைரியம் கொடு
தங்கையே !!

-- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Apr-14, 9:30 pm)
பார்வை : 490

மேலே