இதுவரை படைக்கவில்லை இனியும் விடுவதில்லை

எழுத்து தளமேமக்கே என
சிலர் எழுதிடும் கவி கண்டேன்
புனைபேர் கொண்ட புலித்தோல் போர்த்திய
பசுவாய் உரைப்போர் பலருண்டு
அரும்பாய் முளைத்திடும் கவிஞனின்
கவிகள் வெறுப்பால் தவிர்த்து
கருத்தினை பதிக்கும் கவிஞையும் இங்குண்டு
படைப்பாள் அவரவர் கவி மழலை
மனம் திறப்பால் கொண்ட கருவிற்கு
கருத்தெனும் நெருப்பாய் தந்து
வெறுப்பால் வெளியேற்றிடும் சிலருண்டு
படைப்புக்கள் பரிசுக்காக
பல்லிலிப்பது முறையா ?
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை என்றால்
அன்றைய பாரதி அதையே எடுத்துரைப்பேன் இன்றைய புதிய பாரதி
மதிப்பிற்காக படைக்கும் படைப்புக்கு
நட்பென மதிப்பு தந்திடும் கவியே
எண்ண எழுச்சியற்ற கவிக்கு பரிசா ?
பரிசோதனை தமிழுக்கா?
படைக்கும் படைப்பின் மதிப்பிற்க்கா?
உனக்கென ஏதும் கருத்தேது
உன்படைப்புக்கு கருதிட்டவர்க்கு
நீ தரும் பரிசாய் மதிப்பெண்
மூண்டிடும் தீயில் குளிர்காயும்
கயவர்கள் கொண்ட நட்பு
தவறென தெரிந்தும் தானாய்
முன்வரும் நட்பில் தோழமை எண்ணி
மறுத்திடும் பதிலென வருத்திடும்
சீ ச்சி பழம் புளித்ததென
புது நட்பை தேடியோடும் உலகமிது
புதிதாய் படைப்பவனை வெறிநாயாய்
விழுந்து கடிக்கும் தளம் இது
அதனால் இதுவரை நான் படைக்கவில்லை
இனியும் தவறாய் மதிப்பிடும்
மனநிலை மாற்றிட துடிப்பாய் எழுவேன்!!

எழுதியவர் : புதிய பாரதி (14-Apr-14, 4:56 pm)
பார்வை : 88

மேலே