ஜய ஆண்டு பேசுகிறது

.
உடன் பிறந்தோர்
அறுபது பேர்,
பிள்ளைகள்
பன்னிரண்டு,
பேரப் பிள்ளைகள்
ஐம்பத்திரெண்டு ,
கொள்ளுப் பேரன்
பேத்திகள்
மூன்னூற்றி அறுபத்து ஐய்ந்து.

உடன் பிறந்தாரிடையே
ஒற்றுமை உண்டு.
ஆண்டுக்கு ஒரு முறை
ஒருவருக்கு முன்னுரிமை.

எங்களுக்கு ஓய்வு இல்லை,
ஒழிவில்லை,
ஒழுங்காய் எங்கள்
தொழிலைச் செய்கிறோம்.

மானிடர் செய்த மாற்றம்,
மாற்றி நடக்குது எல்லாம்.

மழை இல்லை,
விளைச்சல் இல்லை,
விலை வாசி வெருட்டுது என்று,
பழியெல்லாம் எங்கள் மேல்.

செய்வதை செய்யாமல்,
செய்யக் கூடாததை செய்துவிட்டு,
பொருமுவது எங்கள் மேல்.

மானிடரே மமதை விட்டு.
இயற்கையோடு இயந்து வாழுங்கள்,
இனிவரும் காலம் நலமாகட்டும்.

சித்திரை முதல் நாள், முதல்
என் ஆட்சி .
மங்கலமாய் ஜெயத்தை
மறுக்காமல் தருபவள் நான்.

என் ஜய ஆண்டில்,
தமிழ்மகள் புகழ் மேலும்
பரவட்டும்.
தமிழ்மக்கள் சிறப்பு நிலை
சிறக்கட்டும்.
மகிழ்ச்சி எல்லையில்லாமல்
எங்கும் நிறையட்டும் .

என் பிறப்பில்,
எல்லோரும் உங்களுக்குள்,
புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல
புத்தாண்டாகிய நான்,
தமிழ்கூறும் நல்லுலகிற்கு,
புத்தாண்டு வாழ்த்துக் கூறி,
விடைபெறுகிறேன்.

எழுதியவர் : arsm1952 (14-Apr-14, 6:17 pm)
பார்வை : 168

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே