ஜய ஆண்டே வருக ஜெயத்தை தருக
சொல்லோடு பொருள்வந்து கொண்டாட
தமிழ் கற்கண்டாய் களித்தாட
பூகண்டு வண்டது குதித்தாட
தேனுண்ட மயக்கத்தில் வண்டது திண்டாட
பொழுதும் முன்பாய் புலர்ந்தாட...!
வந்தது வந்தது சித்திரையும்
மோகம் தெளிந்த முத்திரையும்
களைந்தெழ செய்யும் நித்திரையும்
செஞ்ஞாயிறு போர்த்திய போர்வைக்கடல்
போர்வையை பந்தாய் நீ சுருட்டி
பூமி பந்தில் நீர் இரைப்பாய்...!!
வந்தே நீயும் வாட்டம் தனித்து
மனதால் நினைப்போர்க்கு
மழையாய் பொழிந்திடுவாய் !
அமுதாய் தந்த தமிழே!
ஆண்டு முழுதும் நலமாக்கி
புத்தாண்டாய்...
மீண்டும் மீண்டும் நீ பிறப்பாய்!!