தமிழ் கிறுக்கனின் ஒரு தேடல்

உடையா நிலையில் உறவுமில்லை !
நிலைமாறா நட்பில் நண்பனுமில்லை !
சண்டை போடும் சகோதரன் இல்லை !
கொஞ்சி பேசும் தங்கை இல்லை !

அழகிய மலையில்லை !
மணம் வீசும் மலரில்லை !
காதலை உணர காதலில்லை !!
நான் நடக்கவுமில்லை – ஓர்
இடத்தில் நிற்கவுமில்லை !
யாரையும் தேடி அலையவில்லை !
எனை தேடி யாரும் வரவில்லை !

சுற்றி சுவரில்லை !!
கண்ணெதிரே கடலில்லை !
அருகில் அவளில்லை !!
இப்படி இருந்தும்
தனிமையை - என்
மனம் ஏற்கவில்லை !
வரிகளின் உயிராய் நின்று
எழுத்தை ரசிக்கிறாள்
தமிழன்னை !

கவிதை வரிகளை
கரத்தில் சேர்கிறாள் !
அமர்ந்தநிலை அறிஞன் !
வசந்தநிலை வாசகன் !
உறங்கா நிலை கவிஞன் !
இவர்கள் தான்
இவள் உறவு !!

நான் நிஜம் என்றால்
விரட்டும் வெயிலிலும்
விலகி செல்லாத
என் நிழல் அவள் !!

மடியில் வைத்து மகிழ்கிறாள்
மனிதம் இது என உரைக்கிறாள்
என்னுள் என்னை ரசிக்க வைக்கிறாள் !

இல்லாதது இவளிடம் எது !
பயணம் என்றும் இவளுடன் !
விழிக்கு விருந்து வைத்து
விடியும்வரை இருக்கிறாள் !
தனிமை என்றுமில்லை
தமிழன்னையுடன் தேடலில் !

எழுதியவர் : மணிவேல் (15-Apr-14, 1:35 am)
பார்வை : 96

மேலே