மதிப்பீடு அறிந்து மதிப்பிடு

செம்மறிக் கூட்டம் கண்டு
செம்மொழி படும் பாடு
பெண்மணி பொய்யுரைத்தால்
பெரும் மதிப்பினை தரும் கூட்டமே!

நற்றமிழ் நயவஞ்சக கவிகண்டு
நல்மதிப்பு தரும் ஆடவரே!
நாற்றமடிக்கும் மலருக்கு
நாலுகாலில் பாய்ச்சலா?

போற்றிட வேண்டும் பெண்ணை
போர்த்தி படுத்திடும் அளவிற்கா?
பேடிகள் போல பெண்பால் கொண்டு
பேதம் மறந்து கவிபுனைவதேன்?

நான் கவிஞனும் அல்ல
நான் அறிஞனும் அல்ல
நான் பெண்ணுகெதிரும் அல்ல
நான் நல்கவிக்கு வாசகன் !

செம்மொழி என் தாய்
இலக்கணம் என் உடன்பிறப்பே!
தமிழெந்தன் மூச்சு
தரனியெங்கும் அதுவே பேச்சு !

நல்லதொரு வீணை செய் !
நல்கவிக்கு மதிப்பிடு !
நல்மனம் சொல்ல சொல்ல
நறுமணமாக கவி வாழும் !!

எழுதியவர் : புதிய பாரதி (15-Apr-14, 7:50 pm)
பார்வை : 422

மேலே