உச்சமும் முக்தியும்
உணர்வின் உச்சம் கவி என்றால் ,
அதன் முக்தியிலோ மௌனம் !
மகிழ்வின் உச்சம் சிரிப்பென்றால்
அதன் முக்தியிலோ சாந்தம் !
வளமையின் உச்சம் செழுமை என்றால் ,
அதன் முக்தியிலோ எளிமை !
அடுக்கி கொண்டே போகலாம் ஆயிரம்... ,
தார்மீகம் ஒன்று தான் போலும்,
புரிதலின் உச்சம் வியப்பென்றால் ,
அதன் முக்தியிலோ ஒன்றிவிடுதல் !!!