புத்தாண்டில் புதுமை
பொல பொலவென விடிந்தது
புத்தாண்டின் புதிய காலை
சித்திரையாய் சித்திரமாய்
சிவந்த உதயமாய்
கிழக்கு வானில் !
வரவேற்ற நான்
என்ன வித்தியாசம்
என்று யோசித்தேன்
வித்தியாசம்
நீ செய் என்று
சிரித்தான் ஆதவன்
செவ்வொளி மாற்றி
வெள்ளொளியுடன்
எழுந்தான் வானில் !
நான்
என் வழியில் நடந்தேன்
புதுமையை நோக்கி...
நான் நடந்த வழியினில்
ஆதவன் விரித்தான்
புத்தொளியினை !
--இனிய ஜெய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
----கவின் சாரலன்