தமிழே, ஆரணங்கே

தமிழே, ஆரணங்கே ...!

சித்திரைத் திங்கள் முதல் நாள்
தமிழணங்கே நீ உலகினில் தோன்றிய நாள் ...

தமிழன் அறிவுமிக்கவன்
கணித்தான் நேரத்தை
படைத்திட்டான் அறுபது நொடி
ஒரு நிமிடமானது
அறுபது நிமிடம்
ஒரு மணியானது ....

அறுபதில் மனிதனின்
ஒரு சகாப்தம் முடியுமென்று
எண்ணிடவோ படைத்திட்டான்
அறுபது ஆண்டுகளை ...

அறுபதில் மனிதன்
ஏற்றத தாழ்வுகள்
மேடு பள்ளங்கள்
உறவுகள் பிறிவுகள்
உணர்ந்திட்டான் இதனிடையில் ...

'ஜெய' மென தொடங்கும்
தமிழ்ப் புத்தாண்டு
'ஜெய' த்தினை மேதினில்
தமிழர்கள் அனைவருக்கும்
ஐயமின்றி தந்திடவே
வாழ்த்துகிறேன் இனிய நாளில் ...

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (14-Apr-14, 2:26 pm)
பார்வை : 422

மேலே