நல்லதொரு தொடக்கம்

திருவள்ளுவர் :-

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பாரதியார்:-

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினது பே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

ஔவையார்:-

1. அறஞ்செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண்ணெழுத் திகழேல்.

8. ஏற்ப திகழ்ச்சி.

9. ஐய மிட்டுண்.

10. ஒப்புர வொழுகு.

11. ஓதுவ தொழியேல்

12. ஒளவியம் பேசேல்.

13. அஃகஞ் சுருக்கேல்.

அனைவருக்கும் இனிய வணக்கங்கள், மற்றும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!
எல்லாவற்றிற்கும் சிறந்ததொரு தொடக்கம் வேண்டும்
என்று எல்லோருமே எண்ணுவதுண்டு...
அந்த வகையில் இங்கே எனது தொடக்கத்தை இந்த
உலகின் மிகச் சிறந்த கவிஞர்கள்/எழுத்தாளர்கள்/
இலக்கியவாதிகள் எனப் போற்றப்படும் இந்த
மகான்களின் எழுத்தாசியோடு தொடங்குவதில்
மிகுந்த பெருமையடைகிறேன்.

என்னைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
அன்பு எனது மனம்,
நட்பு எனது குணம்,
எழுத்து எனது உணர்வு.
(நமக்கு எழுத வராது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே...)
உண்மை அன்பையும், உயிர் நட்பையும் தேடுபவன்.
என்னால் முடிந்ததை செய்திடவும், என்னால் முடியாததை
செய்பவர்களை ஊக்குவிக்கவும் கற்று கொண்டவன்....!
இப்போதைக்கு இவ்ளோதான்.. இனி அவ்வப்போது வந்து
எனக்கும் எழுத தெரியும் என்ற பெயரில் உங்களை
இம்சிக்க காத்திருக்கிறேன்... அடியேனை பொருத்தருள
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்... :-)

என்றென்றும் பேரன்புடன்,
நின்னைச் சரணடைந்தேன்...!

எழுதியவர் : திருவள்ளுவர்/பாரதியார்/ஒ (14-Apr-14, 1:37 am)
பார்வை : 384

மேலே