சித்திரையே வருக

சித்திரையே வருக!

முந்திப் பிறந்த முன்னைத் தமிழே!
பிந்திய மொழிகட் கும்நீ அன்னையே!
உந்தன் ஒலியிலா எந்த மொழியுமே!
இந்த உலகினில் கண்ட திலையே!

நாள்கள் வாரம் வருடமென.
கோள்கள் நேரம் பொருத்தமென.
காலம் கணித்த தமிழேயென.
ஞாலம் வழுத்தும் அறிவேயென.

கருவிகள் அறியாக் காலமதில்
அறிவியல் அறிந்த சீலமதில்
வானம் ஆய்ந்த வல்லமைகள்
ஞானம் சித்திரை உள்ளவைகள்.

சித்திரை என்பதும் அறிவென்போம்
அத்தினம் மன்னுயிர் நிரையென்போம்.
புத்தியில் கணிதம் பூத்ததினம்
நித்தியத் தமிழின்னாள் போற்றுதினம்.

கூடிவாழச் சொல்லி சொல்லி
பாடி வந்த சித்திரையே!
கோடில்லா உறவு கொண்டும்
ஓடிவாயேன் இளந்தமிழே!

சித்திரை போற்றுதும் சித்திரை போற்றுதும்.
முத்திரை போன்றதும் சித்திரை போற்றுதும்.
தமிழெனத் தயவென தகையெனப் போற்றுதும்.
அமிழ்தென அறிவெனச் சித்திரை போற்றுதும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (13-Apr-14, 8:41 pm)
பார்வை : 440

மேலே