புத்தாண்டு வாழ்த்து

நாட்கள் ஓட ,
நாமும் ஓட,
வருஷம் ஒன்று முடிகிறது.

வரும் வருஷம்,
ஜய வருஷம் ,
பஞ்சாங்கம் நல்ல
செய்தி சொல்லுகிறது.

ஜகமெல்லாம்
நலமாக வேண்டும்
செழிப்பம் நிலைக்க வேண்டும்
நீர் நிலை மகிர வேண்டும்

உண்மை நிலைக்க
உறவுகள் நிலைக்க
பண்புகள் நிலைக்க
பாரதம் செழிக்க
ஜய ஆண்டே வருக

புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி
நாம் வரவேற்க
புத்தாண்டு புகழ் மனம் சேர்க்கட்டும்
புதிய சிந்தனை மலரட்டும் .

புத்தாண்டு
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !

எழுதியவர் : arsm1952 (13-Apr-14, 8:30 pm)
Tanglish : puthandu vaazthu
பார்வை : 243

மேலே