உழவு நாடன் 5
கொட்டாங்குச்சி வழிச்செடுத்து
நாணல் நரம்பு
பிரிச்சிக்கட்டி .... வாழைத்தோப்பு
வாய்க்காலோரம்
வாசிப்புக்கு உக்காந்தா...
தேக்குமரக் கெளைக்கொண்ணா
கூடுகட்டும் தேனீக்கூட்டம்...!!!
***************************************************
பனையும் பாக்குமரமும்
பங்காளியாத் தெரிஞ்சாலும்
வெத்தலப் பொண்ணு
சோடியாத்தா.. எனக்கொண்டு
போவாகன்னு
வெடிச்சிவிழுந்த பாக்குப்பழம்
எகத்தாளமா சிரிச்சிவெக்க...
விம்மியழுத பனைமரமோ
காக்கா எச்ச வெதமுழுங்கி
ஆலஞ்செடி வளத்துக்காட்டி
இதச்செய்யிடா எந்தம்பிங்கும்....
********************************************************
நாரைக்கால கட்டையின்னு
நம்பிப்போன சிறுமீன
பல்லுக்குள்ள அரிப்பெடுத்த
பச்சநார கொத்தித்தூக்க.....
கட்டக்கால பதம்பாக்கும்
கடிச்சிவெச்சிக் காப்பாத்தும்
கடிகாலு நாயகனா
கூடவந்த நண்டுக்கூட்டு....!!!
*********************************************************
சாரலோட தெசதெரிஞ்ச
காட்டுநாட சிட்டுக்குருவி
பழங் கொத்திக்
குழிபறிச்சி... மழைத்தண்ணி
நெறச்சி வச்சி...
பழச்சாற குடிச்சிப்புட்டு
பாடிச்குதிச்சி
பறந்து திரியும்.....
******************************************************************