என் உயிர்

உன்னை விட அழகினை இந்த உலகில்
வேறெங்கும் காணவில்லை,
உனக்கு ஏதாவது ஒன்று என்றால் மிகவும்
துடித்து போகின்றேன்,
உன்னுடன் வாழ்வதால் மிக மிகவும்
பெருமிதம் கொள்கிறேன்,
உன்னிடம் வளமும், பழமையும், வேற்றுமையில் ஒற்றுமையும் உள்ளது,
உன்னிடம் உள்ள சக்தி இந்த உலகில்
வேறு யாரிடமும் கிடையாது,
ஆனாலும் இங்கு உள்ள அரசியல் எனும்
சக்தி ஆட்டி படைக்கிறது,
உன்னிடம் உள்ள அளவில்லா திறமை
திறமையற்ற ஆட்சியாளர்களால் வெளிபடையாகாமல் போய் விடுகிறது,

கவலை வேண்டாம்! நாங்கள் இருக்கிறோம் ஒரு நாள் விடிவுக் காலம் பிறக்கும் ..

ஏன் உயிரிலும் மேலான தேசமே என் இந்தியா!!!

எழுதியவர் : (15-Apr-14, 7:36 pm)
Tanglish : en uyir
பார்வை : 118

மேலே