காதலிக்கு அல்ல காதலுக்கு

என் இதயத்தின் இன்னிசையே!!
என் இமைத்துடிப்பின் பேசும் மொழியே!

உன் கண்பார்வையில் தொலைகிறேன்!
உன் கண்ணசைவில் மீண்டும் பிறக்கிறேன்!!

காலம் முழுதும் உன் ஞாபகம்!
உன் கண்கள் சொல்லும் என் ஜாதகம்!!

இதுவரை ரசிக்காத மழைத்துளி
இன்று என் கைகளில் உறைந்து நிற்கிறது!!

இருளில் தெரியும் வானவில்லென
உன் புருவமும் வளைந்து நிற்கிறது

உரசி செல்லும் தென்றலும்
உன் நளினம் பற்றி சொல்கிறது!

நெற்றியில் பதிந்த நிலவென
உன் பொட்டும் அழிய மறுக்கிறது!

தென்றலும் வியக்குமடி
உன் மூச்சின் சுவாசத்தினில்!!
நாணமும் நாணுமடி
உன் நாணத்தின் நளினத்திலே!!

மேகம் இல்லாத வானம் இல்லை!
மோகம் இல்லாத இரவு இல்லை!!
நாணம் இல்லாத பெண்மை இல்லை!
அழுகை இல்லாத மழலை இல்லை!
உருவம் இல்லாத பிம்பம் இல்லை!!
உன் பாதம் இல்லாத என் பாதயே இல்லை!!!

என் தலையணையும் என்னைக் காதலிக்கிறது!
என் அணைப்பின் சுகம் கண்டு!
என் இரவுகளும் ஏங்குகிறது
என் தனிமையின் தாகம் கண்டு!
என் இதயமும் ஏங்கித்துடிக்கிறது
இமை துடிக்காத உன் பார்வை கண்டு!

நதி சேரும் கடலாக
குளிர் சேரும் பனியாக
மார் சேரும் மழலையாக
இதழ் சேரும் முத்தமாக
இசை சேரும் கானமாக
என் இதயத்தில் சேர்ந்த இதயமே!
காலம் உள்ளவரை மட்டுமல்ல
காலன் வரும்வரை காத்திருப்பேன்!
காதலிக்கிறேன் என்று நீ சொல்லவேண்டாம்
காதலை புரிந்து கொண்டேன் என்றால் போதும்

யுகம் உள்ளவரை உன் முகம் காணாமலும் வாழ்ந்திடுவேன்!
உன் நினைவில்லாமல் வாழேனடி!!

என் காதலியாக நீ வாழாவிட்டாலும்
என் காதலில் நீ வாழ்ந்தால் போதும்!!

உன் அன்பை ஏங்கி அன்புடன் காத்திருக்கிறேன்!!..........

எழுதியவர் : venkadeshkumar (16-Apr-14, 4:40 pm)
பார்வை : 404

மேலே