கொலை செய்துப்போகிறாய்
நான் உன்னை காதலிப்பது,
தெரிந்தும்,தெரியாதைப்போல்
நடித்து கொல்கிறாய்...
உன் காதல் மொழிக்கு நான்,
காத்திருக்க, நீயோ
உரைத்துப்போகிறாய் சில
சாகடிக்கும் வார்த்தைகளை...
எல்லோரையும் இழந்து,
உன்னை பெற்றது...
என் உணர்வுகளுக்கு நீ உயிர்
கொடுக்க வேண்டும் என்று..,
நீ என் உணர்வுகளை புரிந்து
கொள்ளவில்லை என்று சொல்லப்போவதில்லை...?
என் உணர்வுகளை உணர மறுக்கிறாய்...!
நீ என்னை வெறுத்துப்பேசும்
வார்த்தைகள், உயிர் பெற்று
கொல்கின்றன என்னை...
உன்னால் நான் என்னையே இழந்து நிற்க...
உலகமே வெறுமையாய் தோன்றும்...
அடுத்த நொடிகளுக்கான தேடலும்,
நீயாய் இருக்க, எப்படி தேடுவேன்..?
என் நிம்மதியான வாழ்க்கையை...
உன் அருகில் நான் இருந்தும்..,
என் காதல் தூரமாய் இருக்க..,
பக்கத்திலே இருக்கிறது..!
என் வலிகள்...
வலிகளை மட்டும் எனக்கு
தந்து, காதலை நீ வாங்கி கொள்கிறாய்..,
என்னிடம்...
உன்னை தவிர்க்க நினைக்கும் போதெல்லாம்,
என்னை தவிர்த்துச்செல்கிறது...
என் சிந்தனைகள்...
என்னில் நிறைந்து விட்ட உன்
நினைவுகளை தவிர ,
என்னிடம் ஒன்றும் இல்லை...
தினம் தினம் கொஞ்சமாய் கொன்றாய்...
என்னை...!
இன்று கொலை செய்துப்போகிறாய்...!
என்னை முழுவதும்...