துணிச்சல் துணைவி

'' துணிச்சல் துணைவி ''

'' மறவாதீர் மணவாளா //

'' அன்பினில் உரையாட நான் - உங்களிடம் ,
வாய்மையின் உச்சரிப்பாக இருப்பேன் //

'' அதர்மத்தை ஒழித்துக்கட்ட உங்களிடம் - நான் ,
வீரத்திற்கு துணை நிற்ப்பேன் //

'' நம் தேசத்தை காத்திட உங்களிடம் - நான் ,
நேசத்தை ஊக்குவிப்பேன் //

'' ஊடுருவுக்காரனை விரட்டியடுக்க உங்களிடம் - நான் ,
ஊன்றுகோளாய் மீட்கச் செய்வேன் // - ஆனால் ,

'' மரணத்தை சந்திப்பீரானால் உங்களிடம் - நான் ,
சற்று விலகி நிற்ப்பேன் - ??? ஏனெனில் ,

'' இந்த ஜவானால் உருவாக்கப்பட்ட ஜீவனை ,
மீண்டும் ஜவானாக்குவதர்க்கும் நம் புதல்வனை ,
ஊக்குவிப்பதற்கும் நம் தேசத்தை காப்பதற்கும் ,
நீங்கள் தொடருங்கள் ,,,,

'' மறவாதீர் மணவாளா //

எழுதியவர் : சிவகவி (18-Apr-14, 3:55 pm)
பார்வை : 76

மேலே