+++மறக்க முடியுமா நட்பே+++

பள்ளிப்பருவம்
அருகினிலே நண்பர்கள்...
தினமும் படித்தோம்
பாடசாலையில்...!
வீட்டுப்பாடம்
மனதிற்கு வெறுப்பு...
மாலைநேரம்
வந்தாலோ விடுமுறை
நினைப்பு...!
பருவங்கள்
மாறினாலும் பழகிய
நினைவுகள்
மாறவில்லையே...!
துரவங்கள்
மாறினாலும் தூரம்
சென்றதும்
மறந்ததில்லையே...!
எத்தனை
மகிழ்ச்சி எத்தனை
நிகழ்ச்சி...!
நண்பனே
உன் அருகில் நான்
இருந்தேன் என்
அருகில்
நீ இருந்தாய்...!
மகிழ்ந்தோம்
சிரித்தோம் நட்பை நாம்
வளர்த்தோம்...
என்றுமே
நமது உள்ளத்தில்
நீங்காத
நினைவுகளுடன்...!