பிள்ளை மனம் - ரங்கநாதன் கவிதைகள்
காலுக் கட்டுப் போட்டுகிட்டான்
சம்பளத்தான் மாப்பிள - போயி
கட்டிலேறிப் படுத்து கிட்டான்
மாமனாரு வீட்டில
தந்தை தாயி தவிக்கிறாங்க
தண்ணியில்லாதக் காட்டிலே - போட்டு
தாறுமாறா இழுக்கிறான் - அங்கே
கடன் கொடுத்தவன் கோர்ட்டிலே
காது குத்து திரட்டி சீரு - மாமன் மச்சான்
போட்ட மொய்யக் கேட்குறான்
ஊருசாமி கோவில் வரி - ஊர் பெரிசு
உடும்புப் பிடி பிடிக்கிறான்
சளி இருமலு வைத்து வலி - தந்தை
இராப் பகலாக் குத்தாட்டம்
அடைமழையில வீடு ஒழுகுது - அம்மா
சாய்ஞ்சிப் போனாள் தேராட்டம்
பூனை நாயி கோழி கூட - பார்த்து
பொசுங்கி போயி முடங்குது - அவங்க
போர்த்தி வளர்த்த புள்ள மனசு
பாம்பும் தேளும் மேயுது
கவிஞர். நரியனுர் ரங்கு
செல் : 9442090468

