கட்டாயபடுத்தி வருவது காதல் அல்ல 555

பெண்ணே...

என்னை விரும்பாத உன்னை
தினம் துரத்தி வந்தேன்...

காற்றை போல...

காற்றாக வந்த என்னை
உன் கேசத்தை தழுவி செல்ல கூட...

மறுத்துவிட்டாய்...

விரும்பாத
உன்னை நினைக்க...

எனக்கு இனி
மனமில்லடி...

கட்டாய படுத்தி வருவது
காதலும் அல்ல...

காயபடுதிவிட்டு செல்வதும்
காதல் அல்ல...

இதயத்தில் உருவாகி
உள்ளதால் இணைவது
தான் காதல்...

காதலின் அர்த்தங்கள்
நீ அறிவாயா பெண்ணே...

காலமெல்லாம் உன்னைவிட்டு
இல்லாமல் இல்லை...

இதுதான் காதலடி...

உன்னால் என் வாழ்க்கை
அழிந்துவிட்டது...

நாளை நீ
சொல்லிவிட கூடாது...

என்னை பார்த்து...

காதல் மட்டும் வாழ்க்கை
இல்லையென உணர்ந்தேனடி...

உன்னோடு இருக்க
ஆசை கொண்டேன்...

இனி மண்ணோடு
நான் போனாலும்...

விண்ணை தொடும்
லட்சியங்களோடு இருக்க
ஆசையடி...

நாளை உன் கரம் பிடிக்கும்
உன் மணவாளனை...

நீ உணர்ந்துகொள்
உன் வாழ்க்கை வசந்தமடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Apr-14, 9:01 pm)
பார்வை : 791

மேலே