இன்பகனியமுதே எம்பாவாய் ---கார்த்திக்,நெல்லை

சித்திரத் தமிழுக்கு மத்தியிலாய்
===உன்விழி அழகினை ரசிக்க வந்தேன்
பித்தத்தில் புலம்புகிறேன் என்றெண்ணி
==== என்பக்கதிலிருந்து சென்றாயோ
யுக்திகள் ஆயிரம் இருந்தாலும்
====மௌனத்தினாலே உனை ஈர்ப்பேன்
உனதுச்சந்தலையில் இடும் முத்தத்திலே
===எனது மோகத்தீயை அணைத்துக்கொள்வேன்!!!

உன் மந்திரப் புன்னகை மொத்தத்தையும்
====நான் தந்திரமாக ரசித்திருந்தேன்
நீ இல்லாத அத்தனை நேரத்தையும்
====சொல்லாக மாற்றிக் கவிசெய்தேன்
நீ சுவைத்தளித்த பாகற்காய்ப் பச்சடியில்
====தேனின் சுவையைக் கண்டேனடி
எங்கும் புனிதமே உள்ளதென்று உனது
===சுண்டுவிரல் நகந்தனில் கண்டுகொண்டேன் !!!

எட்டாவது ஸ்வரமொன்று நான் கேட்டேன்
===எட்டாத காதுகளுக்கு மத்தியிலே
எனது காதுகளுக்கு மட்டும் எட்டியதடி
===அங்ஙனம் யாதென்று நீ கேட்டால்
அது உனது எச்சில் விழுங்கிடும் சப்தமடி
====சீ!என்று வெட்கித் தலைகுனிகையிலே-உன்
காலடி மணலாய் மாறிவிட்டேன் -உன்
==== கால் பெருவிரல் என்னை அணைத்ததடி!!!

இம்சை இரவுகள் எத்தனை என்று
====எண்ணிய நாட்கள் பலவுண்டு,பெண்ணே
வானத்து நிலவிடம் கேட்டால் தெரியும்
====சில நட்சத்திரங்களும் எனையறியும்
ரம்மியமானவளே!உன்னிடம் உண்டோ ?
====நான் கண்ட சங்கதி போலும் -அல்லது
நிம்மதியாய் உறங்கினாயோ,மெய்யே
====பகர்வாய், இன்பக் கனியமுதே எம்பாவாய்!!!


அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (20-Apr-14, 5:17 pm)
பார்வை : 138

மேலே