வெப்பத்தை வேடிக்கை பார்க்கும் பனித்துளி நான்

திங்கள் முதல்
வெள்ளி வரை
திட்டமிட்ட அட்டவணை
தீர்ந்த நேரத்தில்

ஏக்கத்தின் ஏமாற்றம்
என்னவளின் நினைவு
எங்கு தேடியும்
இல்லாமல்

அட்டவணை
அனைத்திலும்
அவளுக்கான நிமிடங்கள்

நொடியின் நுனியில்
நின்று
நிமிடம் நகர்த்தி
மணித்துளி மறந்து
காலம் கடக்கிறேன்
காதல் தேடி

தட்டி கொடுத்து
தாலாட்ட
தாமதம் மட்டும்

நகரும்
நொடிகளுக்கு துணை
இமை சேர்த்த
அவளின் நினைவு

அடுத்த நொடிக்கும்
அதுவே துணை

சுட்டெரிக்கும்
வெப்பத்தை
வேடிக்கை பார்த்து

இலையின்
நரம்பில் நகரும்
பனி துளியின்
படபடப்பினை
உள்ளம்
உள்வாங்க

சுற்றி சுற்றி
தேடுகிறேன் - ஓர்
இடத்திலும் ஓயாமல்

அருகில்
அவள் இருந்தால்
ஓய்வு
ஒரு நொடி போதும் ..!

அடுத்த நொடி
அசைந்து ஓடி
ராகம் பாடும் ..!!

வெப்பத்தை
வேடிக்கை பார்க்கும்
பனித்துளி
நான் ...!!

--- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (20-Apr-14, 5:14 pm)
பார்வை : 581

மேலே