நான் வருவேன் துவன்றிடாதே

உதிர்ந்திட்ட ஊதாப் பூவாய்!
உணர்விழந்து
நிறம் மாறி
நிலை தடுமாறி
இருப்பதேனோ என்னவளே!

உன் நிலை கண்டு!
உடைந்து மனம் வெதும்பும்
என் நிலை அறிவாயா?
என்னவளே
எண்ணிப்பார்!

பட்டாம் பூச்சிகளாய்!
பறந்து சுதந்திரமாய்!
பயமின்றி
சுற்றி வந்தோம்!
சிறுவயதில்

அன்று தரம் பார்க்கவில்லை!
பாலினம் நோக்கவில்லை!
சந்தேகம் கொள்ளவில்லை!
சிறுவர் நாம்
நட்பின் பிணைப்பால்!
பிரியவில்லை!

மகரந்தம் நாடும் வண்டாக நானும்!
அதை கொண்டவளாக நீயும்!
ஆவல் கொண்டு உனை நாட!
விசம் கொண்ட பாம்புகளாய்!
விரட்டியே வருகிறது!
இவ்வுலகம்.!!

பிரிப்பதில் ஆனந்தம்!
ஏன் இவர்களுக்கு!
இளமை போனதாலா?
இதயங்கள் இருண்டதாலா?
அன்பான உள்ளங்கள்
இணையக்காண
சகிக்க முடியாததாலா?

கோழையின் செயல்!
தற்கொலை!!
காதலின் செயல்!
கனியும் வரை காப்பது!!
துவன்றிடாதே என்னவளே!
கை பிடிப்பேன் காலம் வரும்!

எதிர்ப்பில்லா காதல்!
சுவைப்பதில்லை!
எதிர் கொண்டெதிர்ப்போம்!
எதிர்காலம் கனியும்வரை!
காத்திரு கை பிடிப்பேன்!

கனவுகளில் உன்னோடு!
காதல் செய்து சுகம் கண்டு!
களித்திருப்பேன் இப்போது!
நினைவுகளில் அதைக்காண!
நான் வருவேன் துவன்றிடாதே!!!

எழுதியவர் : ஜவ்ஹர் (20-Apr-14, 10:29 pm)
பார்வை : 73

மேலே