மனிதம்-ஒரு பார்வை
மாபெரும் பூமியில் மனிதனைத் தேடு;
வீதியிலே இறங்கி, விளக்கொளியில் ஓடு;
மனிதனா என அடையாளம் பாரு;
சரியா என, உன்னிடமே கூறு - பின்
மனிதனைப் படி, மனிதனிடம் படி,
மனிதம் இருந்தால் முழுவதும் படி;
மனம் இருந்தால் தயங்காமல் ஏற்றுக்கொள்,
இல்லையெனில் மயங்காமல் மாற்றிக்கொள்.