ஏன் இந்த தனிமை..

என்னை தாங்குவோரை விட்டு விட்டு
என்னை தவிர்போரிடம் வந்து சேர்த்தாயே என் விதியே...

பிறர் மீதான என் அக்கறை தோற்கிறது சிலர் நடிப்பில்..

பொய்யான நலம் விசாரிப்புக்கு மயங்கவில்லை... நடிக்காதது தவறுதான்..
இப்போது கேட்கவும் ஆளில்லை..

பிறர் மகிழ்ச்சிக்கு வழி விடுகிறேன்
எனக்கதில்லை என்பது தெரிந்தும்..

புனர்பூசம் நட்சத்திரம் ஆகையால் எனக்கிந்த வனவாசமா?

எனக்கு கணம் தலையில் இல்லை..
மனத்தில் தான் என்று சிலர் புரிவது எப்போது?

பிறர்க்காக பொறுத்துக்கொள்வது வலியைத் தருகிறது..
அவரே என்னை யாரோபோல் பார்க்கும் போது..

நன்றியை எதிர்பார்த்தல்ல..
நட்பை எதிர்நோக்கி...

தனிமை சிறை கைதிக்கு
கை நிறைய சம்பளம்..





எழுதியவர் : SABARISRI (28-Feb-11, 10:46 am)
சேர்த்தது : nsabarisri6
Tanglish : aen intha thanimai
பார்வை : 582

மேலே