நீ இல்லாமல்!!
பக்கத்தில் இருந்தும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை..
பொய்யாய் சிரிக்கிறேன்
போக்க முடியாத என் நாட்களுக்காக
உன்னிடம் மட்டும் கூற நினைக்கிறேன்
என் தனிமையை அல்ல
நான் தனிமை படுத்தப்பட்டதை...
எனக்காக வாடுவோரை தேடுகிறேன்..
இக்கவலையை அனுப்பினேன் குறுந்தகவலாக இருவருக்கு...
அதிலொருத்தி பார்த்தாள் வெறும் கவிதையாக...
என்னவளுக்கு தெரியும் அது கவிதை அல்ல என் கவலை என்று..
கவிதை நோக்கில் பார்க்க மாட்டாள்..
குமாரவேலின் மகளாக இருப்பினும்..
அவள் என் தோழி அல்லவா.!!!!!