அழகாய் பேசுவாள்
![](https://eluthu.com/images/loading.gif)
பிரிந்து விடுவோம் என்ற
பயம் தான் உன்னுடன்
சேர விடவில்லை..!
கதைகள் பேசினாய்
கவிதைத் துளிகளாய்
விழிகளில் பேசினாய்
ஊமை மொழிகளால்..!
கேள்விகள் கேட்பாய்
விடை தெரிந்தாலும்..
கற்றுக்கொடுத்தாய் - உனக்கு
தெரியாததையும்!
கண்ணீர் விட்டாய்
காயப்பட்ட போதெல்லாம்..
என் விரல்களில் மட்டுமல்ல
விழிகளிலும் ஈரம்..!
ஆசைப்படுவாய் ஆனால்
கேட்க மாட்டாய்..
வங்கித்தந்தால் நன்றி
சொல்வாய் - உன் கண்களால்!
எனக்கு மட்டுமே புரிந்த உன் விழி மொழிகள்.
சிரிப்பாய் உன் இதழ்களால்
குழந்தை கூட தோற்று விடுமே..
எதிர்பார்ப்பாய் என்னிடம் ஆனால்
என்றுமே
கட்டிக்கொள்ள மாட்டாய்..
இனிமையாய் ரசிப்பாய்
தனிமையில் இருந்தால்!
யாரோ போல் பார்ப்பாய்
எல்லோரும் இருந்தால்!
அழகாய் பேசுவாள்
ஊமை விழிகளால்...