ஒற்றுமை
பிரிந்து நின்று
பிணக்கினை ஏற்று
பிணைப்பினை அற்று
பிடிப்பே இன்றி வாழ்வோரை
புரிய வைக்கும் ஆயுதம்!!
ஊர் இரண்டு
உரைகள் மூன்று
ஊமையாய் இருவருக்குள்
உணர்வின்றி வாழ்வோரை
உணர்த்திடும் புத்தகம்!!
சொந்தங்கள் செயலின்றி
சுகங்கள் பலவிட்டகன்று
சுயமாய் பல செயல் கொண்டு
சோகமாக வாழ்வோரை
சேர்த்து வைக்கும் பிணைகருவி!!
நண்பர்கள் பிரிந்து
நட்பினை மறந்து
நலன்கள் பல விட்டொழிந்து
நடைப்பிணமாய் வாழ்வோரை
நலன் காக்கும் போதி மரம்!!
கைப்பிடித்த மனைவி
காரணமறியாப் பிரிவு
கலங்கியே கவலையுடன்
கண்ணீரில் வாழ்வோரை
கை சேர்க்கும் பிணை கயிறு!!
இனம் பிரிந்து
இடம் பிரித்து
இயந்திரமாய் ஓய்வின்றி
இழி நிலையில் வாழ்வோரை
இணைத்து வைக்கும் பேராயுதம்!!
ஜவ்ஹர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
