மூழ்கிய நினைவுகள்

வாழ்க்கை எனும் புத்தகத்தில்
வரைய ஆரம்பித்த எனக்கு
வரிகள் இருந்தாலும், வார்த்தைகள் இல்லை!

வாழ்வதற்காக வருணிக்கப்பட்ட
இந்த உலகத்தில்
வழக்காட எத்தனையோ பேரோ!

பல இன்பங்களை தோண்டி
சில துன்பங்களை தாண்டி
மகிழ்ச்சி எனும் வெள்ளத்தில் மூழ்க,
மூழ்கடிக்கப்பட்டது நானும், என் கனவுகளும்!

எழுதியவர் : சசிகணேஷ் (22-Apr-14, 7:29 am)
சேர்த்தது : sasiganesh
பார்வை : 72

மேலே