காத்திருந்தேன் காத்திருக்கின்றேன்

எத்தனையோ
குழப்பங்கள்
கொஞ்சம் நடுக்கம்

எத்தனையோ
எண்ணங்கள்
கொஞ்சம் ஏக்கம்

எத்தனையோ
கனவுகள்
கொஞ்சம் எதிர்பார்ப்பு

உலகம்
சற்று நேரம்
மறைய காத்திருக்கும்
பிற உருவங்கள்
மறைந்தே போயிருக்கும்

துருவம்
தீண்டிய நீரினைப்போல்
இதயம் இறுகி
உறைந்து
உருவம் முழுதும்
வெடவெடத்து கிடக்கும்

ஏதேதோ
வார்த்தைகள்
மனதினில்
வலம் வந்துகொண்டிருக்கும்

அவை
அனைத்தும்
மௌனத்தில் வீழ்ந்து
நனைந்து எழுந்து
நடைபிணமாய்
அந்த தருணம் வரை
காயாமல் காத்துகிடக்கும்

விதியால்
தொலைந்து போன
சில பருவ காலங்களின்
மாற்றம்
என்னை தேடவைத்ததுபோல்
நீயும் தேடியிருப்பாயோ
இல்லை
இதுவும் கடந்துபோகும்
ஓர் உறவு என்று
மனதின் ஒரு மூலையில்
கிடத்தி வைத்துள்ளாயோ..!!

முன்புபோல்
பேச முடியுமோ
தயக்கங்கள்
தடை போடுமோ..!!

இந்த சந்திப்பு
நீளுமோ
இல்லையேல்
சில கணங்களிலேயே
அர்த்தமற்று
நீர்த்துப் போய்விடுமோ..!!

உடைந்துவிட்ட
நெருக்கங்கள்
உருமாறி
ஒட்டிக்கொள்ளுமோ
நகம்போல
வீழ்ந்து மாயுமோ..!!

அந்த
எதார்த்தம்
எப்படி இருக்கும்..
பிரித்துப் பார்த்த
காலம் சொல்லும்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (23-Apr-14, 9:31 am)
பார்வை : 137

சிறந்த கவிதைகள்

மேலே