துரோகிகள் கவனத்திற்கு
எதிரிக்கு கூட என் மணம்
இறக்கம் காட்டும்
துரோகிகளுக்கு இல்லை ......
நெஞ்சில் குத்தியவனை
நேருக்கு நேர் எதிப்பேன்
முதுகில் குத்தியவரை
மாண்டும் மறக்கமாட்டேன் .......
நன்றி அர்த்தம் தெரியாத
மனித மிருகங்களே
நாய்களிடம் கற்றுக்கொல்ல்லுங்கள்
நல்லதொரு பாடத்தை .......
பச்சையாய் இருக்கும்வரை
பழங்களை உண்டுவிட்டு
பட்டுப்போன என்னை
பற்றவைத்துவிட்டா போவீர்கள் .......
பாவி உறவுகளே
பாவத்திற்கு நெருக்கமாகாதீர்கள்
உலகம் உருண்டோடுகிறது
அப்படியே நின்றுவிடவில்லை ......
உறவுகளை கொன்று
உறக்கத்தை கொன்று
இறக்கம் இல்லாமல்
இன்னும் எதை தேடுகிறீர்கள் ........
நினைத்ததை மாற்றும் சக்தி
மனதிற்கு இல்லை உணருங்கள்
வேண்டும்போது உறவு பூப்பதும்
வேண்டாமென்றால் அதை அறுப்பதும்
மனதிற்கு பழக்கம் இல்லை .......
உறவு விளையாட்ட இல்லை
இது வரவு விளையாட்ட ?
உங்கள் உதாசினத்தால்
உள்ளம் பெற்ற காயம் அறிவீரோ
மரணத்தை மணிக்கொருமுறை
அனுபவிக்கிறேன் நான் .......
ஏதோ என்னை
ஏளனமாய் நினைத்து விட்டீர்கள்
காலம் எனது கட்டளைக்கும்
கைகட்டும் நேரம் வரும் .......
அதுவரையில்
அமைதியாகவே காத்திருப்பேன்
துரோகிகளே - குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் குறிப்பேட்டில் .......
நாளை துரோகம்
உங்களையும் கூட
பதம்பார்க்க காத்திருக்கிறது
கவனம் !