அவள் எனக்கு வேண்டும்-5

"எப்படி பாட்டி இப்படி.. நான் வேற என்னமோன்னு நினைச்சேன்", என்று சொல்லி பொத்தென ஷோபாவில் அமர்ந்தான்.

தீபம் ஏற்றுவதற்கு புடவையில் வந்தவளை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான் சிவா.

அவனை அவள் நிமிர்ந்து பார்க்காமல் நேரே உள்ளே செல்ல, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது சிவாவுக்கு.

பாட்டி கொடுக்க கொடுக்க ஒவ்வொரு விளக்காக வைத்துக்கொண்டு வந்தவள், மதில் மேல் வைக்க எட்டி எட்டி பார்த்தாள்... எட்டவில்லை பாட்டியையும் காணவில்லை.

இப்போது அவன் நிமிரவேயில்லை. குனிந்து கொண்டே நமட்டுச்சிரிப்பு சிரித்தான்.

எழுந்து அவள் பக்கத்தில் வந்தவன்

"தூக்கிவிடவா!", என்றான்.

பட்டென நிமிர்ந்தவளின் கைகளில் இருந்த விளக்கை வாங்கி, மதில்மேல்
வைக்க போனான்.

அந்த இடத்திலிருந்து நகர சென்றவளை கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.

அவளின் கை நடுங்கியது. மற்றொரு கையால் அந்த பிடியை எடுக்க முயன்றவள் தோற்று அவனைப் பார்த்து,

"ப்ளீஸ்! ப்ளீஸ்! கைய விடுங்க", என்றாள்.

அவளின் தவிப்பை ரசித்தவன்,

எத்தனை கைகளைப் பிடித்து வைத்தியம் செய்பவன் நான்..
நான் ஏன் இப்படி ஆனேன்.. என்று புலம்பிக்கொண்டான்.

ஆனால் என்ன இது.. அவனுக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது அந்த தவிப்பு.

பாட்டி உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்..

"சிவா! அவளை வீடு வரைக்கும் கொண்டு விட்டு விட்டு வா", என்று

பதில் பேசாமல் அவள் பின்னாலேயே சென்றான் சிவா.

அனைவரின் வீட்டு முன்னும் அழகாய் மின்னின தீபம்.

சிவாவின் கண்க‌ளுக்கு அவளின் கண்களில் ஜொலித்தன விளக்குகள்.

வாசல் வரை அவளை விட்டு விட்டு திரும்பிவிட்டான்.

அவன் போகும் திசையையே பார்த்துக்கொண்டு நின்றவள்.. அவன் பட்டென திரும்பவும்.. சட்டென உள்ளே ஓடிவிட்டாள்.

ஏதோ வெற்றி கொண்டவன் போல பாடிக்கொண்டே வீட்டுக்கு சென்றவன்... கன்னியின் மனதை களவாடியது கூட ஒரு வெற்றிதானோ... என்று மனதிற்குள்ளேயே வினவிக்கொண்டான்.

கோமதி அக்காவுக்கு இடுப்பு வலி வர, ட்ரைவர் லீவு என்பதால்
சிவாவே காரை ஓட்ட உதவிக்கு வந்தவன், கோமதியின் அப்பா வழி சொல்ல மருத்துவமனைக்கு வந்தனர்.

அவனும் ஒரு மருத்துவர் என்பதால், கூட இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டான். இது தாத்தாவின் கட்டளையும் கூட... கோமதியின் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

"தம்பி! நீங்க வீட்டுக்கு போங்க.. ரொம்ப பெரிய உதவி செய்து இருக்கீங்க", என்றார்.

"தம்பி! ட்ரைவர் இன்னும் வரல.. நம்ம காரிலேயே போய்டுங்க", என்றார்.

"அம்மாடி! நீயும் தம்பிகூட வீட்டுக்கு போ. போய் சாப்பாடு ரெடி பண்ணு. நான் வந்து விடுகிறேன்", என்றார்.

இருவரும் காருக்கு செல்ல,

பின்னால் கதவை திறந்து விட்டு விட்டு, இவன் முன்னால் வர
அவள் உள்ளே ஏறி மெல்ல நகர்ந்து மறு கதவை திறந்து கொண்டு இறங்க, என்னவென்று தெரியாமல்

"என்னாச்சு?", என்றான் திகைப்பாக...

(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (23-Apr-14, 6:31 pm)
பார்வை : 574

மேலே