சிறுகதையின் தொடர்கதை
வாழ்க்கை என்பது வலிகள் நிறைந்ததே
அதில் வழி தேடி அலைவது வாடிக்கை
ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்தே
இருந்தாலும் ஏனோ பலருக்கு இந்த உலக
வாழ்க்கை ஏமாற்றத்தையே தருகின்றது
வாழ்வோம் போராடி முடிந்தவரையல்ல
நாம் முடியும்வரை என்ற முன்னுரையோடு ,,,,
..."" சிறுகதையின் தொடர்கதை ""...
(பாகம் இரண்டு)
சந்தோசமான அவள் இளமைகாலம்
சங்கடங்கள் ஏதும் அறிந்திராமல்
சக தோழிகளோடு சடையிளுத்து
சண்டையிட்டு பல்லான்குழியாடி
பள்ளி படித்த காலங்களில் மேடை
பேச்சுபோட்டி கேள்விக்கு பதிலென
நடனத்தில் தாவணிகள் சேர்த்து
அவள் தம் குழு செய்த தாமரைப்பூ
இன்றும் அவள் நினைவில் மங்கா
புதுநிலவாய் பூத்தேதான் நிற்கிறது
படிப்பில் சுட்டியவள் உவகையாய்
பேசுவதில் தேர்ச்சியும் பெற்றவள்
தோழிகளோடு தண்ணீர் அள்ளிவர
ஆற்றங்கரைபோகவே அக்காளுடன்
நித்தமும் சண்டையாய் சண்டையிட்டு
இளையவள் இவளேன்பதால் என்றும்
அவளுக்கே முன்னுரிமை இல்லத்தில்
அவளுக்கு இட்ட பெயரைவிட அவள்
பெற்ற செல்ல பெயரே நிலைத்தது
உடன் பிறப்புக்களோடு உல்லாசமாய்
நிம்மதியாய் நித்தமொரு கனவுகளாய்
சந்தோஷ ஊஞ்சலில் ஆடி கழித்தால்
பாரதியின் பாட்டிற்கு ஏற்றார்போலவள்
ஆனந்தமாய் துள்ளி விளயாடியவாறே
கூச்சலிட்டு இங்கும் அங்குமாய் ஓடியாடி
அதிர்ச்சியாய் ஒரு செய்தி அவளிடம்
நெருங்கி நாளை வருமென்று அறியாதே
வந்ததென்ன தென்றலா புயலா என்றறிய
ஆவலாய் நானும் உங்களோடு சேர்ந்தே
கதையோடினைந்து காத்திருக்கிறேன்,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...