தனிமை கொடுமை

தனிமை விரும்பி
தவிக்கிறேன் உருகி

என் நிழல் கூட
துணை வேண்டாம்
எனும் அளவிற்கு
என் தனிமை

தனிமை
எனக்கு பிடித்ததா
இல்லை
பிடிப்பது போல
நான் நடித்ததா
விடை தேடி
விடை இல்லை

அறிவை வளர்த்த தனிமை
அன்பை பறித்தது கொடுமை

ஐம்புலன் அடக்கி வாழும்
ஆமையா நான்
என் கோட்டை என்று
கூடை நினைக்கும்
நத்தையா நான்

தனிமை வெறுமை
மிக அருமை என
ஏகாந்தம் பாடி
பாதாளம் செல்லும்
வேதாளம் நான்

தனிமை கற்று கொடுத்தது
உணர்வை அழிக்கும் சக்தி

அன்பாய் பேசினால்
ஆரோக்கியம்
உனக்கும் உறவுக்கும்
அதை மறந்தவனும் நான்

யாரும் இல்லாத
தீவில் கூட
வாழ ஆசை
ஆனால்
உறவுகளில்
ஒன்றி போக
மறுக்கிறது தனிமை

நண்பன் அவன்
இருக்கும் வரை
தனிமை மட்டும்
தேடிய மனம்
தூரம் கொஞ்சம்
போன பின்னே
நண்பன் தேடி
அலைகிறது தினம்

எழுதியவர் : கார்த்திக் (23-Apr-14, 6:42 pm)
Tanglish : thanimai kodumai
பார்வை : 2434

மேலே