மத்திய அரசின் பிடி நம் கையில் இருக்க வேண்டுமாம்

சிறு கட்டுரை

அரசியல் கண்ணோட்டங்கள் மாறுகின்றன அல்லது மேம்படுகின்றன அல்லது சுய நலப் பாதையில் திசை திரும்புகின்றன என்று சொல்லலாம் என்று இப்போதைக்குத் தோன்றுகிறது..

இன்று ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் தன் நினைவு தெரிந்த காலம் முதல் ஒரு கட்சியின் விசுவாசியாம்.

சரி இந்த முறை உங்கள் வாக்கு யாருக்கு என்று கேட்டேன். சற்றும் யோசிக்காமல் என் [மாநிலக்] கட்சிக்குத்தான் என்றார்.

இது மத்திய அரசை உருவாக்கும் தேர்தல். நீங்கள் அந்தக் காலத்திலேயே இருக்கிறீர்களா? மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதால் என்ன நன்மை என்றேன்.

அவர் சற்றும் யோசிக்கவில்லை. "தம்பி நீ சொல்வது சரிதான். அன்றெல்லாம் கட்சித் தலைமை எங்கு கை காட்டுகிறதோ அந்தக் கட்சிக்கு வாக்களிப்போம். அது சட்ட மன்றத் தேர்தலா ?அல்லது பாராளுமன்றத் தேர்தலா ? என்று தெரியாது. சில தேர்தல்களில் [பாராளுமன்றத் தேர்தல்களில்] நம் கட்சிச் சின்னத்தை காணவில்லையே என்று வாக்குச் சீட்டில் தேடியதும் உண்டு. இப்போதெல்லாம் அப்படியில்லை. எனக்கும் அரசியல் தெரியும். நம்ம கட்சிக்கு வாக்களிப்போம். மத்திய அரசை நிர்மாணிப்பவர்கள் நம்மைத் தேடி வரட்டுமே" என்கிறார்.

இந்த கண்ணோட்டம் இன்னும் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கண்ணோட்டத்தை தவிர்க்க தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் நம்பிக்கையை இனி வரும் மத்திய அரசுகள் நிச்சயம் உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் தேசியக் கட்சிகள் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும்.

அப்போது அந்த அரசு நல்லரசாகும்.,இந்த தேசம் வல்லரசாகும் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (23-Apr-14, 7:46 pm)
பார்வை : 70

மேலே