காதலையும் வலியையும் உணர்ந்தேன் உன் பிரிவில் 555

என்னவளே...

பிரிவை கண்டு
வருந்தாதே...

இமைகள் பிரிந்தால்தான்
உலகை ரசிக்கலாம்...

நாம் மீண்டும் சந்திப்போம்
என்று கைகொடுத்தாய்...

அப்போது புரியவில்லை
எனக்கே என் காதல்...

நீ சென்ற பின்புதானடி
நான் உணர்ந்தேன்...

என் காதலையும்
வலியையும்...

விண்ணை விட்டு பிரியாத
வெண்ணிலவை போல...

நாம் மீண்டும்
சந்திப்போம்...

காத்திருக்கிறேன்
நான் காதலுடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Apr-14, 4:45 pm)
பார்வை : 194

மேலே