எனக்குத்தானே

உன்னை ஏன் பார்த்தேன்...
பார்க்காமலே இருந்திருக்கலாம்!!!
பார்த்தும் உன்னிடம் ஏன் பேசினேன் ...
பேசாமலே இருந்திருக்கலாம்!!!
பேசியும் உன்னிடம் ஏன் பழகினேன்...
பழகாமலே இருந்திருக்கலாம்!!!
பழகியும் உன்னை ஏன் காதலித்தேன்...
காதலிக்காமலே இருந்திருக்கலாம்!!!
காதலித்தும் உன்னிடம் ஏன் சொன்னேன் ...
சொல்லாமலே இருந்திருக்கலாம்!!!
பார் இப்போது அவஸ்தை யாருக்கு....
எனக்குத்தானே!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (25-Apr-14, 4:24 pm)
பார்வை : 116

மேலே